திருமுருகன் இயற்கை வழி மருத்துவ மையம்

Jul 4, 2022 | 0 comments

அக்குபஞ்சர்: 

நம் உடம்புக்கான மருந்து வேறெங்குமில்லை, நம் உடம்புக்குள்ளேயே உண்டு. இதுதான் அக்குபஞ்சர் மருத்துவமுறையின் சாராம்சம்.

அக்குபஞ்சர் என்னும் மாற்றுமுறை மருத்துவத்தால் பலதரப்பட்ட நோய்களை சரி செய்ய முடியும் எந்தவித பக்கவிளைவுகளும் இல்லாமல் செய்யப்படுவது. அக்குபஞ்சர் என்றால் நம் உடலில் இருக்ககூடிய புள்ளிகளை நுண்ணிய ஊசிகளைக் கொண்டு நம் நோய்களை சரிசெய்வது. இந்த புள்ளிகள் அனைத்தும் நம் உடலின் தோலின் அடுத்த அடுக்கிலேயே அமைந்திருக்கிறது. இதை சக்தி ஓட்டப்பாதை என்றும் அழைக்கலாம்.

அனைத்துவிதமான நோய்களுக்கும் தீர்வு இந்த அக்குபங்க்சர் அளிக்கிறது. நீடித்த நாட்பட்ட வியாதிகளுக்கும் இது தீர்வு அளிக்கின்றது. பக்கவிளைவுகள் இதில் இல்லை, நோய்க்கான காரணம் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு ஏற்ப அந்த காரணத்தை களைவதுதான் இந்த சிகிச்சையின் நோக்கம்!

‘‘வயிறு, மண்ணீரல், கல்லீரல், சிறுநீரகம், சிறுநீர்ப்பை, சிறுகுடல், நுரையீரல், பெருங்குடல், பெரிகார்டியம், இதயம், பித்தப்பை, தேக வெப்பக் கட்டுப்பாட்டு உறுப்பு ஆகிய 12 உறுப்புகள் உடலில் முக்கியமானவை. இவற்றின் வழியான சக்தி ஓட்டப் பாதைகள்தான் நம்மை இயக்குகின்றன.

அவற்றுள் ஏதேனும் ஒரு பாதையில் ஏற்படும் தேக்கம் அல்லது குறைபாடே நோய். சக்தி ஓட்டப் பாதையில் பல வர்மப்புள்ளிகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரச்னைக்கும் அதற்கேற்ற புள்ளிகளைத் தூண்டுவதன் மூலம் தீர்வு காணமுடியும். இந்த வர்ம சிகிச்சைதான் அக்குபங்சர், அக்குபிரஷர், அக்கு டச் என பல வடிவங்களில் கொடுக்கப்படுகிறது.

 காந்த சிகிச்சை: 

சிறந்த மாற்று மருத்துவ முறையில் ஒன்றாக திகழ்வது காந்த மருத்துவம். இம்முறையில் மருந்து, மாத்திரை, ஊசி என்று எதுவுமில்லை. அறுவை சிகிச்சைகள் இன்றி பக்க விளைவுகள் ஏதுமின்றி ஓர் எளிய சிகிச்சை முறை இது.

சித்தா, ஆயுர்வேதம் போன்ற மற்ற மருத்துவ முறைகளுடன் காந்த மருத்துவத்தை ஒரு துணை மருத்துவமாகவும் பயண்படுத்தலாம். அதனால் நோய் விரைவில் குணமாகும்.

காந்த சிகிச்சை முறையில் உள்ளுக்கு அருந்தும் மருந்து காந்த நீர் மட்டுமே. இது உடலின் மீது எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாமல் ஜீரண உறுப்புகள்,நரம்புகள், ரத்தகுழாய்கள் ஆகியவற்றில் உண்டாகும் குறைகளை நீக்குகிறது. உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கிறது. உடலில் சேரும் கொழுப்புகள் (கொலஸ்ட்ரால்) சிறுநீரகத்தில் ஏற்படும் கல் முதலியவற்றை கரைக்கும் தன்மை காந்தநீருக்கு உண்டு.

பல் வலியையும், பல் கூச்சத்தையும் நீக்கும் திறனும் காந்த நீருக்கு இருக்கிறது. காந்தநீரானது உடலில் தேவையற்ற கழிவுகளை நீக்கி ஆரோக்கியத்தை பேணிக் காக்கிறது. சைனஸ், உடல் பருமன், தீராத நாட்பட்ட தலைவலி, மூட்டுவலி, இடுப்பு வலி,கழுத்துவலி, பெண்கள் மாதவிடாய் தொடர்புடைய கோளாறுகள் போன்ற பல நோய்களை காந்த மருத்துவத்தின் மூலம் குணமாக்கலாம்.

 பயன்கள் : 

நம் உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு திறனை வளர்த்து வியாதிகளை நீக்குகிறது. இரத்த ஓட்டத்தை ஒழுங்குபடுத்தி உடலுறுப்புகளை சரியாக இயங்கச் செய்கிறது.

நோய் உள்ள இடங்களில் வட துருவ, தென் துருவ காந்த வட்டுகளை வைத்து சிகிச்சை செய்தால் நோயின் வீரியம் படிப்படியாக குறைந்து அறவே நீக்கச் செய்யலாம்.

தேவைப்பட்டால் உணவிலும் கொஞ்சம் மாறுதல்களை செய்துகொள்ள வேண்டும். கட்டுப்பாடான உணவு முறையும் காந்த மருத்துவமும் நோயை விரைவில் குணப்படுத்தி இயற்கை நல் வாழ்வை அளிக்கும்.

 ஹீலிங்: 

“ஹீலிங்” என்பது மருந்து இன்றி மாத்திரை இன்றி ஒரு மனிதனின் பிராண ஆற்றலை கொண்டு செய்யப்படும் சிகிச்சை முறையாகும். மனிதனின் ஸ்தூல உடலை தொடாமல் சூக்சும சரீரத்தை உணர்ந்து அறிந்து செய்யும் சிகிச்சை முறையாகும் .

ஸ்துல கண்களுக்கு தெரியாத அதே சமயத்தில் சூக்சும கண்களால் அறிய கூடிய பயிற்சி முறைகள் உள்ளது . மனித உடல் இயக்கம் சூக்சும சரீரத்திலேயே உள்ளது . அதில் உள்ள இயங்கு முறைகள் சீர் கெடும் போது பல நோய்கள் உருவாகிறது.

ஒரு நோய் உருவாகும் போது அங்கே எதோ சில பிராண சக்தி செல்லவில்லை என அறிந்து கொள்ள வேண்டும் . பிறப்பிற்கும் இறப்பிற்கும் பிராணாவே காரணமாகிறது.

மனிதன் எந்த நோய் வந்த உடனேயும் இறந்து விடுவதில்லை ,படிப்படியாக நோய் தன்மை அதிகரித்து பின் இறக்கிறான். ஆனால் உடல் எந்த விநாடியிலும் சுயமாக அவனை காப்பாற்ற வேலை செய்து கொண்டே இருக்கிறது. அதை அறியாமல் அவன் எடுத்து கொள்ளும் மருந்து மற்றும் உணவுகள் அதை குணப்படுத்தவோ அல்லது மேலும் சீர்கெடவோ செய்கிறது . மருந்து என்பது மறுஉந்து சக்தி ஆகும். அதை தொடர்ந்து பயன்படுத்துவது தவறு .மனித உடலில் இயல்பு உந்து சக்தி உள்ளது . அதை அதிகரித்து கொள்ள வழி கண்டு பிடிக்க வேண்டும். இதற்கு “ஹீலிங்” உதவுகிறது . உடல் நோய்கள் மற்றும் மன நோய்கள் ஹீலிங் செய்வதினால் குணம் பெறலாம்

பிரபஞ்சம் எங்கும் COSMIC ENERGY நிறைந்திருக்கிறது. இதனைத் தமிழில் உயிர்சக்தி என்றழைக்கலாம். அல்லது ஜீவ சக்தி என்றும் அழைக்கலாம். அந்தக் காஸ்மிக் எனர்ஜியைக் கிரகித்து அதனை அடுத்தவர் உடலில் செலுத்துவதே ரெய்கி கலை

நமது உடல் மொத்தம் ஏழு சக்கரங்களின் ஆட்சிக்கு உட்பட்டதாக இருக்கிறது. சக்தி மையங்களைத்தான் சக்கரம் என்றழைக்கிறார்கள். இந்தச் சக்கரங்கள் சரிவர இயங்குவதற்கு அவற்றில் சரியான அளவு உயிர்சக்தி இருக்கவேண்டும்.

அந்த சக்தி மையங்களில் பல்வேறு காரணங்களால் சக்தி குறைபாடு ஏற்படும்பொழுது அந்த மையத்துக்கு உட்பட்ட அங்கங்களில் பாதிப்பு நேர்கிறது என்பதுதான் ரெய்கியின் தத்துவம்.

காஸ்மிக் எனர்ஜியைக் கிரகித்து குறிப்பிட்ட அந்தச் சக்கரத்தை வலுவூட்டுவதன்மூலம் இழந்த சக்தியை அந்தச் சக்கரம் பெற்றுவிடுகிறது. சக்தி சமன் செய்யப்பட்டவுடன் பிரச்சினை தீர்ந்து உடல் பழைய நிலைமைக்கு வந்துவிடுகிறது.

ரெய்கியால் எந்தவிதமான பக்க விளைவுகளும் இல்லை. எந்த வயதினரும் செய்து கொள்ளலாம்

சிகிச்சை அளிக்கப்படும் நோய்கள்

ஒற்றைத் தலை வலி,சைனஸ்,கருப்பை கட்டி,தைராய்டு,வெள்ளைப்படுதல்,தூக்கமின்மை,சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம்,நரம்பு தளர்ச்சி.

வீட்டுக்கொரு இயற்கை மருத்துவர் பயிற்சி வகுப்புகள்

இயற்கை வழி மருத்துவ மையம் கீழ்கண்ட பயிற்சி வகுப்புகளை வழங்கி வருகிறது.விருப்பமுள்ளவர்கள் பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து பயன் பெறலாம்.

1.யோக/முத்திரா பயிற்சி

2.அக்கு பிரஷர்/ காந்த சிகிச்சை பயிற்சி

3.இயற்கைமருத்துவம் (நீர் சிகிச்சை, மண் சிகிச்சை, சூரிய ஒளி சிகிச்சை, வண்ண மருத்துவம், தியாணம்)

4.மாணவர்கள் நினைவாற்றல் பெற ஆல்ஃபா தியான பயிற்சி

5.கர்ம வினையிலிருது விடுபட, நாள்பட்ட நோயிலிருந்து விடுபட மற்றும் மனம் அமைதியும் நிம்மதியும் பெற்று நலமான வாழ்வு பெற சக்ர யோக தியானப் பயிற்சி

வேலை நாட்கள்:

அனைத்து வார நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை செயல்படும்

மேலும் விவரங்களுக்கு :

K G பார்த்திபன்

Mobile: +91 9894699721, +91 7092698713

முகவரி :

திருமுருகன் இயற்கை வழி மருத்துவ மையம்,

2/373 L.N.கோயில் தெரு,

அம்மையார்குப்பம்,

திருவள்ளூர் மாவட்டம்-631301

குறிப்பு:

முன் அனுமதி பெற்று வருதல் சிறந்தது

Related Articles

Related

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு

தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு தள்ளிவைப்பு . தேதி பின்னர் அறிவிக்கப்படும் . ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு - இணைப்பு இங்கே -...

read more

குறள் 191

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்எல்லாரும் எள்ளப் படும்மு.வ உரை: கேட்டவர் பலரும் வெறுக்கும் படியாகப் பயனில்லாத சொற்களைச் சொல்லுகின்றவன், எல்லாராலும்...

read more

இந்திய இரயில்வே – மண்டலங்கள் மற்றும் கோட்டத் தலைமையகங்கள்

Image Source : Wikimediaஇந்திய இரயில்வே  மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை மேலும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் ஒரு கோட்டத் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) தலைமை தாங்குகிறார், அவர் மண்டலத்தின் பொது...

read more