இணையதளம் அறிமுகம்:

நம் கிராமத்தின் சிறப்புகளை இணைய தளம் வாயிலாக உலகுக்கு தெரியப்படுத்த உருவாக்கப்பட்ட தளம் .நம் கிராமம் குறித்த,  அமைவிடம் , கிராமத்தினர்க்கு தேவையான முக்கிய அறிவிப்புகள், பள்ளிகள், கோயில்கள் அரசு அலுவலகங்கள், நம் கிராமத்தினரின் தொழில்கள், திருவிழாக்கள், விளையாட்டுகள், அவசர கால தொடர்பு எண்கள், பேருந்து கால அட்டவணைகள்   மற்றும் மக்களுக்கு தேவையான கல்வி, தொழில்நுட்பம்,வேலைவாய்ப்பு ,நம் இளைஞர்கள் வழி நடத்தும் சமூக நல இயக்கங்கள் மற்றும் நம் இளைஞர்களின் திறமைகளை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களின் குறும்படங்கள் என பல்வேறு தகவல்கள் இங்கு பதிவிடப்படும்.

பொதுவான தகவல்கள் மட்டுமின்றி வியாபாரம் , தனி நபர் , தொழில்கள் ,அரசியல் சார்ந்த விளம்பரங்கள் இணையத்தில் பதிவு செய்யப்படும்.

இணையத்தில் விளம்பரங்கள் பதிவு செய்ய +91 8124731939 என்ற எண்ணை அழைக்கவும்.

அமைவிடம்:

நமது கிராமம் திருவள்ளூர் மாவட்டம், ஆ.கே.பேட்டை வட்டத்தில் அமைந்துள்ளது என்பது அனைவரும் அறிந்ததே.நமது கிராமம் திருத்தணி சட்டமன்றத் தொகுதியிலும் மற்றும் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியிலும் அமைந்துள்ளது.நமது கிராமம் கடல் மட்டத்திலிருந்து சுமார் 170 மீட்டர் உயரத்தில் உள்ளது. நம் ஊரின் கிழக்கு திசையில் திருவள்ளூர் மாவட்டத்தின் பிற பகுதிகளும்,மேற்கு மற்றும் வடக்கு திசையில் ஆந்திரத்தின் சித்தூர் மாவட்ட்த்தின் பகுதிகளும் தெற்கு திசையில் வேலூர் மாவட்டத்தின் பகுதிகளும் உள்ளது.ஆ.கே.பேட்டை மற்றும் திருத்தணி பகுதிகளைச் சுற்றியுள்ள மலைப்பகுதிகள் நம் மாவட்டத்தில் அமைந்துள்ள முக்கிய மலைப்பகுதிகளாக கருதப்படுகிறது. மக்கள் தொகை 2011 -ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட மக்கள் தொகைக் கணெக்கெடுப்பின்படி நமது கிராமத்தில் 2450 பேர் வீடு உள்ளவர்கள் எனவும், மொத்த மக்கள் தொகை 10750 எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 5499 பேர் ஆண்கள், 5251 பேர் பெண்கள் மற்றும் 0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகள் மொத்தம் 1226 பேர். இதில் ஆண் குழந்தைகள் 632 பேர் மற்றும் பெண் குழந்தைகள் 594 பேர். நம் கிராமத்தின் மொத்த மக்கள் தொகையில் 7710 பேர் கல்வி பயின்றவர்கள் அதில் 4444 பேர் ஆண்கள் மற்றும் 3266 பேர் பெண்கள் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.கல்வி பயிலாதவர்கள் மொத்தம் 3040 பேர், இதில் 1055 பேர் ஆண்கள், 1985 பேர் பெண்கள் ஆவர்.மேலும் 799 பேர் பிற்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்கள் என்றும் அதில் 399 பேர் ஆண்கள் மற்றும் 399 பெண்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.(சான்று:ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை) கிராமத்தின் பகுதிகள்: அம்மையார்குப்பம்,அம்பேத்கர் காலனி,அண்ணா நகர்,பாரதிதாசன் நகர்,எல்லப்ப கண்டிகை,காந்தி நகர்,இந்திரா நகர்,K.P.N. கண்டிகை,K.P.N. கண்டிகை a.c.,காமராசர் காலனி,ம.பொ.சி.நகர்,ராஜிவ்காந்தி நகர்,சிவலிங்கபுரம்,G.S.D.நகர்,T.G.அப்பாதுரை நகர்,பொன்னப்ப நகர் ,முதலியன அம்மையார்குப்பம் கிராமத்தின் பகுதிகளாகும்.(சான்று:ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை)

கிராமத்திற்கு பொது போக்குவரத்தாக விளங்குவது ஷேர் ஆட்டோ மற்றும் பேருந்து முதலியன.கீழே பேருந்து கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. 

வழித்தட எண்

புறப்படும் நேரம்

சென்றடையும் ஊர்

97 அரசு பேருந்து

03:45 AM

திருத்தணி

தனியார் பேருந்து

04:15 AM

சித்தூர்

97G அரசு பேருந்து

04:45 AM

திருத்தணி

தனியார் பேருந்து

05:30 AM

புத்தூர்

T47 அரசு பேருந்து

05:35 AM

பள்ளிப்பட்டு

97 அரசு பேருந்து

06:00 AM

திருத்தணி

தனியார் பேருந்து

07:00 AM

காவேரிப்பாக்கம்

T48 அரசு பேருந்து

07:30 AM

மகான்காளிகாபுரம்

T48 அரசு பேருந்து

08:00 AM

திருத்தணி

தனியார் பேருந்து

08:30 AM

பொதட்டூர்பேட்டை

தனியார் பேருந்து

10:15 AM

திருத்தணி

T48 அரசு பேருந்து

10:30 AM

மகான்காளிகாபுரம்

T48 அரசு பேருந்து

11:00 AM

திருத்தணி

தனியார் பேருந்து

12:00 PM

பொதட்டூர்பேட்டை

T48 அரசு பேருந்து

01:30 PM

மகான்காளிகாபுரம்

T48 அரசு பேருந்து

02:00 PM

திருத்தணி

தனியார் பேருந்து

02:00 PM

ஆரணி

தனியார் பேருந்து(சிற்றுந்து)

02:45 PM

மத்தூர்

97 அரசு பேருந்து

03:00 PM

திருத்தணி

தனியார் பேருந்து

04:15 PM

பொதட்டூர்பேட்டை

T48 அரசு பேருந்து

04:30 PM

மகான்காளிகாபுரம்

T48 அரசு பேருந்து

05:30 PM

திருத்தணி

தனியார் பேருந்து

06:00 PM

திருத்தணி

தனியார் பேருந்து(சிற்றுந்து)

07:15 PM

மத்தூர்

T48 அரசு பேருந்து

07:30 PM

மகான்காளிகாபுரம்

T48 அரசு பேருந்து

08:00 PM

திருத்தணி