இரயில் நிலைய பெயர்ப்பலகையில் MSL என்பது என்ன?

நம்மில் பெரும்பாலோர் இரயில்களில் பயணம் செய்கிறோம், பயணிகளுக்கு உதவுவதற்காக நிலையத்தின் இரு முனைகளிலும் பெயர்பலகைகளில் நிலையத்தின் பெயர் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதில் இரயில் நிலையத்தின் பெயர்களுக்கு அடியில் வெள்ளை நிற பின்புறத்தில் சிவப்பு நிற எழுத்துக்களில் MSL என குறிப்பிட்டு சில எண்கள் குறிப்பிடப்பட்டு இருப்பதை கணித்தது உண்டா ?என்ன அது? எதற்காக பயன்படுத்தப்படுகிறது?
MSL என்பது Mean Sea Level என்பதை குறிக்கும்.அதாவது அந்த ரயில் நிலையம் சராசரி கடல் மட்டத்திலிருந்து எவ்வுளவ்வு உயரத்தில் உள்ளது என்பதை குறிக்கிறது.
சராசரி கடல் மட்டம் (MSL) என அழைக்கப்படும் கடல் மட்டத்திற்கு மேலே உள்ள நிலையத்தின் உயரத்தை முக்கியமாக எழுதுவதற்கான காரணம் இரயில்களில் பயணிக்கும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பிற்காகவும் மற்றும் இரயில்களை சீராக இயக்குவதற்காகவும் பயன்படுகிறது
MSL ஆனது ரயில் ஓட்டுநர்கள் மற்றும் காவலர்களுக்கு அவர்கள் பயணிக்கும் உயரத்தைப் பற்றி எச்சரிக்கை செய்கிறது. இது ரயில் ஓட்டுநர்களுக்கு ரயிலின் வேகத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது, குறிப்பாக அதிக உயரத்தை நோக்கி நகரும் போது.
ரயில் அதிக உயரத்தை நோக்கி நகர்ந்தால், ரயில்களின் சீரான இயக்கத்திற்காக ரயிலின் ஓட்டுனர்கள் அதன் என்ஜின்களுக்கு அதிக சக்தியை வழங்குகிறார்கள்.
நமக்கு அருகில் உள்ள திருத்தணி இரயில் நிலையம் சுமார் கடல் மட்ட உயரத்திலிருந்து 85 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது. இந்த அளவு நாம் திருத்தணியிலிருந்து சென்னை நோக்கி பயணிக்கும்போது சில இடங்களில் நிலப்பரப்பின் அமைப்பை பொறுத்து அதிகரிக்கவும் சென்னைக்கு அருகில் குறைந்தும் காணப்படும் . காரணம், நாம் கடற்கரையை நோக்கி செல்லும்போது நம் நிலப்பரப்பின் படி கடல்மட்ட உயரம் குறைந்து கொண்டே செல்லும்.
இனி அடுத்த இரயில் பயணத்தின்போது ஒவ்வொரு இரயில் நிலையத்தின் கடல் மட்ட உயரத்தினை கவனிக்கவும்.
Related Articles
Related
இந்திய இரயில்வே – மண்டலங்கள் மற்றும் கோட்டத் தலைமையகங்கள்
Image Source : Wikimediaஇந்திய இரயில்வே மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது, அவை மேலும் பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன, ஒவ்வொன்றும் ஒரு கோட்டத் தலைமையகத்தைக் கொண்டுள்ளன. ஒவ்வொரு கோட்டத்திற்கும் ஒரு கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) தலைமை தாங்குகிறார், அவர் மண்டலத்தின் பொது...